
- News18 Tamil
- Last Updated: June 03, 2020, 11:15 IST
- TAMILARASI News18 Tamil Nadu
தமிழகத்தில் ஜுன் 2ம் தேதி கண்டறியப்பட்ட 1091 தொற்றுகளில், 809 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால், சென்னையில் தொற்று பாதித்தவரின் எண்ணிக்கை 16,585 ஆக அதிகரித்துள்ளது. இதில், 8,506 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 135 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் சென்னையின் பங்கு 67 சதவிகிதம் ஆகும்.
சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, தண்டையார்பேட்டை மண்டலத்தில் 168 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் 125 பேரும், தேனாம்பேட்டை 101 பேரும், அண்ணாநகரில் 70 பேரும், அடையாறு 66 பேரும், திரு.வி.க.நகரில் 60 பேரும், கோடம்பாக்கம் 54 பேரும், அம்பத்தூரில் 32 பேரும், திருவொற்றியூரில் 24 பேரும், மாதவரத்தில் 22 பேரும், வளசரவாக்கத்தில் 20 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், சோழிங்கநல்லூரில் 17 பேரும், பெருங்குடியில் 15 பேரும், ஆலந்தூரில் 14 பேரும், மணலியில் 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராயபுரம் 3060
தண்டையார்பேட்டை 2007
கோடம்பாக்கம் 1921
தேனாம்பேட்டை 1871
திரு.வி.க.நகர் 1711
அண்ணா நகர் 1411
அடையாறு 949
வளசரவாக்கம் 910
அம்பத்தூர் 619
திருவொற்றியூர் 559
மாதவரம் 400
சோழிங்கநல்லூர் 279
பெருங்குடி 278
மணலி 228
ஆலந்தூர் 243
ராயபுரத்தில் கடந்த 16ம் தேதி தொற்று எண்ணிக்கை 1000 ஐ கடந்தது. அடுத்த 10 நாட்களில் 26ம் தேதி 2000 ஐ கடந்த நிலையில், அடுத்த 8 நாட்களில் இன்று 3000ஐ கடந்துள்ளது.
ராயபுரத்தில் மொத்தம் இதுவரை 233 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிளாக மாற்றப்பட்டன. இதில் 166 பகுதிகள் விடுவிக்கப்பட்டு, தற்போது 67 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளன. இந்த மண்டலத்தில் மக்கள் அடர்த்தி அதிகம் என்பதால் இங்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதேபோல், சென்னையில் இரண்டாவது மண்டலமாக தடண்டையார்பேட்டையில் தொற்று எண்ணிக்கை 2000ஐ கடந்துள்ளது. இந்த மண்டலத்தில் கடந்த கடந்த 25ம் தேதி தொற்று எண்ணிக்கை 1000ஐ கடந்தது.
அடுத்த 9 நாட்களில் இன்று 2000ஐ கடந்ததுள்ளது. கடந்த 10 நாட்களில் தண்டையார்பேட்டை மண்டலத்தில் தொற்றின் பரவல் வேகம் என்பது மற்ற மண்டலங்களை காட்டிலும் அதிகமாக உள்ளது.
சென்னையில் ஒட்டுமொத்தமாக பாதிப்பில் ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களில் மட்டுமே 30 சதவிகித பாதிப்ப்பு பதிவாகி உள்ளது.
Also read... ’எல்லையில் இறக்கி விட்ட கேரள அரசு; உள்ளே அனுமதிக்காத தமிழக அரசு...’ குழந்தைகளுடன் தவிக்கும் தமிழர்கள்
\1\6சீனாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..? உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
>