
- News18 Tamil
- Last Updated: April 11, 2020, 12:12 IST
ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸால் 7447 பாதிக்கப்பட்டும் 239 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று மாநில முதல்வர்கள் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்து ஆலோசிக்க உள்ளார். இதன் பின் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி கலந்தாலோசிக்கிறார். ஊரடங்கை இரு வாரங்களுக்கு 30-4-2020 வரை நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என்று தோன்றுகிறது.
ஊரடங்கு காலத்தில் மோடி அரசு ஏழைகளை மறந்துவிட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் தலா
ரூபாய் 5000 தந்தால் மொத்தச் செலவு ரூ 65,000 கோடி. இது நம்மால் முடியும், இதனைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.
என் பணிவான யோசனையை நம் முதலமைச்சர்களிடம் நான் தெரிவித்திருக்கிறேன். பிரதமரின் முடிவு என்னவென்று பார்க்கலாம்“ என்று பதிவிட்டுள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் \1\6இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube