
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 4ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. 72 தொகுதிகளில் நடைபெற்றுவரும் இந்த தேர்தலில் காலையிலேயே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில் தேர்தல் ஆணையமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
சமூக வலைதளங்களிலும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளம்பரம் செய்கிறது. இந்நிலையில், கூகுள் தனது முகப்பு பக்கத்தில் வாக்களிப்பதற்கான வழிகாட்டியை வெளியிட்டுள்ளது. முகப்பு பக்கத்தில், மை வைக்கப்பட்ட விரல்கொண்ட லட்சினையை வைத்துள்ளது.அந்த லட்சினையை கிளிக் செய்தால், எப்படி வாக்களிப்பது என்ற வழிகாட்டியை காண்பிக்கிறது கூகுள்.
\1\6.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.