
- News18
- Last Updated: November 29, 2019, 08:27 IST
பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாதர்கள், அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்ற கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
பொது விநியோகத் திட்டத்தின்கீழ் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர், அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தரவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்திட முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன் அடிப்படையில், சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால் ஆன்லைன் அல்லது வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த 26-ம் தேதி கால அவகாசம் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டு, இன்றுடன் அவகாசம் முடிவடைகிறது.
ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் அல்லது விண்ணப்பத்துடன் ஸ்மார்ட் கார்டை ஜெராக்ஸ் எடுத்து வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரடியாக அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பது எப்படி...?
ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, வலது ஓரத்தின் கீழே இருக்கும் ‘சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற’ என்ற எழுத்தை கிளிக் செய்யவும்...
ஸ்மார்ட் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை உள்ளீடு செய்து, கேப்ட்சா குறியீட்டு எண்ணை டைப் செய்து பதிவு செய்ய வேண்டும். பின்னர் உங்களது மொபைல் போனுக்கு ஒருமுறை கடவுச்சொல் வரும்.. அதனை உள்ளீடு செய்ய வேண்டும்
பின்னர், இடது ஓரத்தின் கீழே இருக்கும் அட்டை பிறழ்வுகள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதில், புதிய கோரிக்கைகளை கிளிக் செய்ய வேண்டும்.
கீழே இருக்கும் அட்டை வகை மாற்றம் என்பதை கிளிக் செய்ய வேண்டும்
பின்னர், புதிய அட்டை வகையை தேர்வு செய்ய வேண்டும். உறுதிப்படுத்திய பின்னர் பதிவு செய்ய வேண்டும். இதனை அடுத்து உங்களது விண்ணப்பம் பதிவாகிவிடும்.
பொதுவிநியோகத்துறையின் இணையதளம் மட்டுமல்லாது மொபைல் ஆப் மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.