வாட்ஸ்அப் செயலியை 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் பயன்படுத்த முடியும். பொதுவாக வாட்ஸ்அப் உங்கள் ஃபோன் என்ன மொழியில் உள்ளதோ அதற்கு ஏற்றவாறு மாறும். உதாரணத்திற்கு உங்கள் ஃபோனின் மொழியைத் தமிழில் மாற்றினால் வாட்ஸ்அப் செயலியும் தமிழுக்கு மாறிவிடும். ஆண்டிராய்டு ஃபோனில் மொழியை மாற்ற “Settings > System > Languages & input > Languages” என்பதற்குச் சென்று Add a language என்பதை கிளிக் செய்து மொழியை மாற்றிக்கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் ஆண்டிராடு ஃபோனில் வாட்ஸ்அப் செயலியில் “More options > Settings > Chats > App Language” என்பதற்குச் சென்று மொழியை மாற்றிக்கொள்ளும் தெரிவும் உள்ளது. ஐபோன் எனில் “iPhone Settings > General > Language & Region > iPhone Language” என்பதற்குச் சென்று மொழியைத் தேர்வு செய்யலாம். விண்டோஸ் ஃபோன் என்றால் “Settings > Time & language > Language. Tap Add languages” என்று மொழியை மாற்றலாம். ஜியோ ஃபோன் எனில் ‘Settings > Personalization > Language’என்ற இடத்திற்குச் சென்று மொழியை மாற்றலாம். குறிப்பு: ஒருவேளைமொழி மாற்றத்திற்கான இந்த தெரிவு உங்கள் ஃபோனில் இல்லை என்றால் அதற்கான வசதி உங்கள் நாட்டில் இல்லை என்ற பொருளைக் குறிக்கும்.