அமெரிக்காவிலிருந்து வெளிவரும் டவுன் மற்றும் கன்ட்ரி என்ற இதழின் கோடைக்காலப் பதிப்பு உலக அளவில் 2020-ம் ஆண்டுக்கான மக்களுக்கு சேவை செய்யும் நபர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்புக் காலத்தில் நம்பிக்கைத் தருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. அதில், ரிலையன்ஸ் ஃபௌன்டேஷனின் தலைவர் நீட்டா அம்பானி இடம் பெற்றுள்ளார்.
இந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் இடம் பெற்ற ஒருவர் அவர் மட்டுமே. ரிலையன்ஸ் ஃபௌன்டேஷன் மூலம் கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் உதவியது, பொருளாதார உதவி செய்தது, இந்தியாவில் கொரோனாவுக்கென்று சிறப்பு மருத்துவமனை அமைத்து ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஆப்பிள் தலைவர் டிம் கூக், மைக்கெல் ப்ளூம்பெர்க், லியார்டானோ டிக்காப்ரியோ உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.