கொரோனா காரணமாக மேற்கிந்திய தீவுகளில் கிரிக்கெட் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதாக கிரிக்கெட் வெஸ்ட் இண்டிஸ் தலைவர் ரிக்கி ஸ்கெரிட் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கி உள்ளது. அதனால் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கிரிக்கெட் வெஸ்ட் இண்டிஸ் தலைவர் ரிக்கி ஸ்கெரிட் கூறுகையில், ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த நிலையில் தற்போது திட்டமிடப்பட்ட தொடர்கள் தள்ளிப்போவதாலும், நாடு பொருளாதார சிக்கலில் உள்ளதாலும் கிரிக்கெட் விளையாட்டின் நிலை மோசமாக உள்ளது என்றார்.
மேலும் இதன் காரணமாக, செலவினக் குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ரிக்கி ஸ்கெரிட் தெரிவித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில் அது கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also see...
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.