தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு வரும் பிப்ரவரி 4-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு 2020 குறித்து அண்ணாப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகள், அதன் உறுப்புக்கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகத்தின் மண்டல கல்ல அண்ணாமலைப் கழகம், அரசு மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் 2020-21-ம் கல்வியாண்டில் சேரலாம்.
டான்செட் நுழைவுத் தேர்வினை எழுதுவதற்கு ஜனவரி 7-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை annauniv.edu. tancet.annauniv.edu/tancet/என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு பிப்ரவரி 4-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை இந்த இணையதளத்தில் சென்று தெரிந்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான நுழைவுச்சீட்டு பிப்ரவரி 13-ம் தேதி வெளியிடப்படும். எம்.சி.ஏ. படிப்பிற்கு பிப்ரவரி 29-ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும், எம்.பி.ஏ.படிப்பிற்கு பிப்ரவரி 29-ம் தேதி மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்பிற்கு மார்ச் 1-ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணிவரை நுழைவுத் தேர்வு நடைபெறும்.
இவர்களுக்கான தேர்வு தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 15 நகரங்களில் தேர்வு நடத்தப்படும்.
இந்த தேர்விற்கான முடிவுகள் மார்ச் 20-ம் தேதி வெளியிடப்படும். மார்ச் 23-ம் தேதி தேர்வர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also see...