ஹோட்டல் சென்றால், வீக் எண்ட் பார்ட்டி என்றால் நிச்சயம் BBQ சிக்கன் இடம்பெறும். அதன் ஸ்மோக்கி நறுமணமும் காரசார சுவையும் பார்க்கும் போதே நாவூற வைக்கும். ஆனால் BBQ சிக்கன் சாப்பிடுவது நல்லதா என என்றைக்காவது யோசித்ததுண்டா..?
இறைச்சிகள் பொதுவாகவே சில ஆர்கானிக் ஆசிட்களைக் கொண்டிருக்கும். அதுதான் நாம் சாப்பிடும்போது தசை செல்களை வலுபெறச் செய்து ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
சிக்கனை அதிக வெப்பநிலையில் நீண்ட நேரம் சமைக்கும் போது அதில் உள்ள கெமிக்கல்கள் குழுவாக சேர்ந்து ஹைட்ரோசைக்ளிக் அமினீஸ் (heterocyclic amines (HCAs))என்கிற கெமிக்கலாக மாறுகிறது. இந்த கெமிக்கல் உருவாக்கம் உடல்நலத்திற்கு புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்து கொண்டதாம்.
அந்த வகையில் சிக்கனை அதிக வெப்பத்தில் சமைக்கும்போது ஹைட்ரோசைக்ளிக் அமினீஸ் அமிலம் அதிகமாக சுரக்குமாம். எனவே சிக்கனை வறுப்பது, கிரில் செய்வது, என அதிக வெப்பத்தில் கூடுமானவரை வேக வைப்பது HCAs ஐ அதிகம் சுரக்க வைக்கும். இதனால் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.
அதோடு BBQ சிக்கனின் மற்றொரு சிறப்பு அதன் புகை வாசனைதான். ஆனால் அதிலிருந்து வெளியேறும் புகையானது பாலிசைக்ளிக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன் ( polycyclic aromatic hydrocarbons (PAHs) என்கிற கெமிக்கலைக் கொண்டதாம். அதுவும் புற்றுநோயை உண்டாக்கும் என பிபிசி சைன்ஸ் ஃபோக்கஸ் இணைய இதழ் தெரிவிக்கிறது.
இந்த HCAs மற்றும் PAHs இரண்டையும் ஆய்வுக் கூடத்தில் வைத்து எலிகளுக்கு செலுத்தி சோதனை செய்ததில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய அனைத்து சாத்தியக் கூறுகளும் இதில் உள்ளன என உறுதி செய்துள்ளனர்.
எனவே முடிந்தவரை சிக்கனை அதிக வெப்பத்தில் சூடுபடுத்துதல், சமைத்தல், வறுத்தல் போன்றவற்றை செய்யாதீர்கள். வேக வைத்து சாப்பிடுவதே நல்லது. ஆரோக்கியமான உணவே நீண்ட ஆயுளுக்கான அடிப்படை என்பதை மறவாதீர்கள்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
பார்க்க :