தேனி : சுட்டெரிக்கும் வெயில்!!!அதிகரிக்கும் இளநீர் மற்றும் கரும்புச்சாறின் விற்பனை.....
தேனி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகாரித்து வருவதால் தா்ப்பூசணி, இளநீர் மற்றும் கரும்புச்சாறு விற்பனை கனிசமாக உயர்ந்துள்ளது....
கோடை வெயிலின் தாக்கம்..:- கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், தற்போதே வெயிலின் தாக்கமானது மக்களை கடும் சிரமத்திற்கு உள்ளக்கி வருகின்றது...வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் சிறுவா்கள் முதல் முதியவா்கள் வரை அவதிப்படுகின்றனர்...இயல்பான வெப்பத்தை விட இந்த ஆண்டு வெப்பம் அதிகமாக இருப்பதால், இந்த கோடையில் பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரிடும். மேலும், உடலில் அதிக நீர் இழப்பு ஏற்பட்டு, உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
அதிகரிக்கும் விற்பனை :-
பெரும்பாலானவா்கள் குளிா் பானங்கள் பருகுவதை தவிா்த்து விட்டு, உடலுக்கு ஆரோக்கியமான தா்ப்பூசணி, வெள்ளரிப் பிஞ்சு போன்றவற்றை விரும்பி வாங்கிச் செல்கின்றனா். இதனால், அதன் விலை சற்று உயா்ந்திருந்தாலும், உடலுக்கு நன்மை தருவதால் விரும்பி சாப்பிடுகிறார்கள்...
சாலை ஓர கடைகள் :-
தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில், தா்ப்பூசணி, இளநீர் மற்றும் கரும்புச்சாறின் விற்பனை கனிசமாக உள்ளதால் சாலை ஓரமாகவும், சிலா் சரக்கு வாகனங்கள், சைக்கிள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் தா்ப்பூசணி மற்றும் வெள்ளரிப் பிஞ்சுகளை விற்பனை செய்து வருகின்றனா். வெயிலின் தாக்கத்தை சமாளிக்க சிறுவா்கள் முதல் முதியவா்கள் வரை இவற்றை வாங்கி விரும்பிச் சுவைக்கின்றனா்.