விமானங்களில் நடு இருக்கைகள் காலியாக விடப்படாததால் தனிமனித இடைவெளி பின்பற்றவில்லை எனவும் பல்வேறு புகார்கள் எழுந்தன.
இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது. இந்நிலையில், விமான போக்குவரத்து இயக்குநரகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், விமானங்களில் நடு இருக்கை காலியாக வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் நடு இருக்கையை காலியாக விட முடியவில்லையெனில் பயணிகளுக்கு இடையே தடுப்பு வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் விமானங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பயணிக்க அனுமதிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.