துபாயிலிருந்து விமானம் மூலம் கேரளா வந்த 25-க்கும் மேற்பட்ட தமிழர்களை பாதுகாக்கப்பட்ட பகுதியில் வைக்காமல், நள்ளிரவில் தமிழக எல்லையில் கேரள அரசு விட்டுச்சென்ற நிலையில், தமிழக அதிகாரிகளும் அனுமதிக்காததால், அவர்கள் குழந்தைகளுடன் உணவின்றி தவித்து வருகின்றனர்.
விசா காலம் முடிந்து கொரோனா ஊரடங்கு காரணமாக துபாயில் முடங்கியிருந்த இந்தியர்கள் இங்கு வருவதற்கான முன்பதிவை தூதரகம் வழியே மேற்கொண்டிருந்தனர். துபாயில் உள்ள இந்திய தூதரகம் வழியாக முன் பதிவின் அடிப்படையில் சிலரை இந்தியா அழைத்து வருவதற்காக சிறப்பு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டது. நேற்று மதியம் 3:20 மணி அளவில் அபுதாபியிலிருந்து புறப்பட்டு இரவு 8:30 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்த விமானத்தில் 25க்கும் மேற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் வந்துள்ளனர்.
தாங்கள் அங்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாக்கப்படுவோம் என எண்ணி இருந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த யாரையும் இங்கு பாதுகாக்க முடியாது என்று கூறி பேருந்து ஒன்றில் அவர்களை ஏற்றி தமிழக எல்லையான களியக்காவிளை பகுதியில் கேரள அரசு இரவு 11 மணி அளவில் இறக்கிவிட்டுள்ளது.
தமிழக எல்லையில் இருந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இபாஸ் இல்லாத காரணத்தை காட்டி அவர்களை எல்லையில் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் இரு மாநில எல்லையில் கையில் குழந்தைகளுடன் தமிழர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
உணவு வழங்கப்படாத நிலையில் குழந்தைகளுடன் பட்டினியில் வாடி வருவதாகவும், இபாஸ் விண்ணப்பித்தும் அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை என்றும் உடனடியாக தங்களை பரிசோதித்து மாநிலத்திற்குள் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
Also See:
சீனாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..? உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube