மக்களவைத் தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் இங்கு உள்ள வழிமுறையைப் பின்பற்றுவதன் மூலம் வாக்காளர் அடையாள அட்டையில் முகவரியை எளிமையாக மாற்றலாம்.
2/ 11
தேசிய வாக்காளர் அடையாள் சேவை இணையதளம் (https://www.nvsp.in/) சென்று ‘Form 6’-ஐ தேர்வு செய்து “Apply online for registration of new voter/due to shifting from AC” என்பதை கிளிக் செய்யவும்.
3/ 11
இந்த இணையதளத்தை இந்தி, ஆங்கிலம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பயன்படுத்த முடியும்.
4/ 11
மாநிலம், மாவட்டம், தொகுதி போன்ற விவரங்களை அளித்து எதற்காகத் தொகுதியை மாற்ற வேண்டும் என்பதைத் தேர்வு செய்து முகவரியை மாற்றலாம்.
5/ 11
வாக்காளரின் பெயர், பிறந்த தேதி, பாலினம், போன்ற விவரங்களை ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் அளிக்க வேண்டும்.
6/ 11
பின்னர் வரும் பக்கத்தில் நடப்பு முகவரி மற்றும் நிரந்த முகவரி போன்ற விவரங்களை அளிக்க வேண்டும்.
7/ 11
தேவைப்பட்டால் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்றவற்றையும் அளிக்கலாம்.
8/ 11
வயது சான்றாக பிறப்பு சான்றிதழ், பள்ளி படிப்பு சான்றிதழ்கள், பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைப் பதிவேற்ற வேண்டும்.
9/ 11
முகவரி சான்றாக பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வங்கி பாஸ்புக், ரேஷன் கார்டு, டெலிபோன் பில், மின்சார கட்டணம், எரிவாயு கட்டணம், போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
10/ 11
மேலே கூறிய விவரங்களை எல்லாம் அளித்த பிறகு captcha குறியீட்டை உள்ளிட்டு, விவரங்களைச் சரிபார்த்த பிறகு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
11/ 11
குறிப்பு: புகைப்படம், வயது சான்றிதழ் மற்றும் முகவரி சான்றிதழ் உள்ளிட்டவை JPG, PNG, BMP, JPEG கோப்பு வடிவத்தில் 2 எம்பிக்குள் இருக்க வேண்டும்.