மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19 தொடங்கி, 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மார்ச் 27-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுவைத் திரும்பப் பெற மார்ச் 29-ம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்வது எப்படி? என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25,000 ரூபாயும், சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் 10,000 ரூபாயும் தேர்தல் டெபாசிட் செய்ய வேண்டும். இதுவே எஸ்சி, எஸ்டி என்றால் இந்தக் கட்டணத்தில் 50 சதவீதம் டெபாசிட் செய்தால் போதும். வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது டெபாசிட் தொகைக்கான டிமாண்ட் டிராஃப்ட்டையும் இணைக்க வேண்டும்.